பள்ளிகளிலே குண்டுபோட்டுவிடுவானென்று பயந்துநடுங்கியே
இங்கு சில மூடரும் பள்ளிகளை மூடிவிட்டனர்!(?)
சளி பிடித்ததால் மூக்கையே வெட்டிவிடும் மூடரும்
இப்புவியிலுள்ளனரென்பது உண்மையன்றோ?...(நானறியேன்)
Thursday, February 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)

Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.
உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்
இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
nkashokbharan@lankamail.com
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்





1 comments:
இலங்கை இராணுவத்தினர் தினம் தினம் வெளியிடும் கணக்குகளின்படி பார்த்தால் கடந்த ஜனவரி முதல் இதுவரை புலிகள் இயக்கத்தில் 3873 பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர். புலிகள் இயக்கம் கூட்டிக் கழித்து வெளியிடும் கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால் ஜனவரி முதல் இதுவரை 1654 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தமது தரப்பில் கொல்லப்படுபவர்கள் பற்றியும் எதிர் தரப்பில் கொல்லப்படுபவர்கள் பற்றியும் இவ்விருதரப்பாரும் எக் காலத்திலும் உண்மை சொல்லியது கிடையாது. ஆனால் புலிகள் அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் தமது தரப்பில் கடந்த நவம்பர் முதல் 1964 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அரசாங்கம் விடுத்த அறிக்கையில் தமது தரப்பில் 687 இராணுவத்தினர்; கொல்லப்பட்டதாக கூறுகிறது.
முகமாலை இலங்கைப் படைகளுக்கு விரிக்கப்பட்டுள்ள மரணப் பொறி என்கின்றனர் புலிகள். வன்னித் தளம் மீது சுருக்கை இறுக்கி வருகிறோம், புலிகளின் தலைவரை உயிரோடு பிடித்து புலிகளுக்கு முடிவு கட்டியே தீருவோம் என சூழுரைக்கிறது இலங்கை இராணுவம்.
கடந்த பல மாதங்களாக இலங்கை அரசாங்கப் படைகள் வடக்கில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தின் பெரு நிலப்பரப்பு பிரதேசத்தில் கிராமம் கிராமமாக மோதல் நடக்கிறது. பங்கர், மதகு, பாலம், மோட்டார் நிலைகள் மற்றும் அவ்வப்போது சில கிராமங்கள் என புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து விடுவிக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக அரசாங்கப் படைகள் அறிக்கைகளை விடுகின்றனர். ஆனால் அவ்விடங்களை தாங்கள் விட்டுவிட்டுப் பின்வாங்கவில்லை எனப் புலிகள் தரப்பில் இருந்து அறிக்கைகள் வெளி வந்ததாக தெரியவில்லை.
இச் செய்திகள் ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன். அப்பிரதேசத்தில் தொடர்ந்து கடும் மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன என்பதுதான். அரசாங்கப் படைகள் புலிகளின் கடும் எதிர்ப்பை இப் பிரதேசத்தில் எதிர் நொக்குகின்றனர். அதற்கு உண்மையான காரணம் உண்டு. மன்னார் மாவட்டத்தை விட்டு புலிகள் வேகமாக பின்வாங்கினால் அது இராணுவத்தினருக்கு மனோ தைரியத்தை கொடுப்பதோடு. வன்னித் தளத்தை நோக்கிய அவர்களின் நகர்வையும் விரைவுபடுத்திவிடும் என்பதாகும்.
வன்னி நோக்கிய நகர்வை இராணுவம் மூன்று முனைகளில் நகர்த்த திட்டமிட்டுள்ளதை பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளாம். ஒரு புறமாக வவுனியரில் இருந்தும் மறுபுறமாக மணலாறில் இருந்தும் (வெலி ஓயா) மறுபுறம் யாழப்பாணத்தில் இருந்தும் மேற்கொள்ள அது திட்டமிட்டுள்ளது. வவுனியாவில் இருந்து பெருமெடுப்பில் இராணுவம் முன்னேற வேண்டுமெனில் மன்னார் பெரு நிலப்பரப்பு பிரதேசத்தில் இருந்து புலிகளின் தளங்கள் அல்லது முகாம்கள் அகற்றப்படல் வேண்டும். அல்லது ஏற்கனவே முன்னர் பல தடவைகளில் நடந்தது போல் இரு பக்கத்தில் இருந்தும் புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரலாம். எனவே அந்த நிலைமையை தவிர்ப்பதற்கு நடத்தப்படுவதே தற்போதை மன்னார் பிரதேசத்தில் நடத்தப்படும் படை நகர்வாகும். அதனைத் தடுக்கும் முயற்சியில் புலிகள் பெருமளவு ஆயுதங்களை இழக்காவிட்டாலும் பெருமளவு தமது ஆட்பலத்தை இழந்து வருகின்றனர். இருந்தாலும் இயன்றளவு காலத்திற்கு இராணுவத்தினரை மிக மெதுவாக நகரச் செய்வதே புலிகளின் நோக்கமாகும.;
ஆனாலும் தமது தரப்பினருக்கு மிக அதிக இழப்பு ஏற்படும் எனக் காணுகையில் புலிகள் அப்பகுதியை விட்டு பின்வாங்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். முகமாலையில் இராணுவத்தினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு புலிகள் எடுக்கும் முயற்சியை அவர்கள் மன்னார் மாவட்டத்தில் எடுப்பதில்லை. காரணம் வவுனியா யாழப்பாணம் பிரதான வீதிக்கு மேற்காக அமைந்துள்ள பிரதேசத்தில் தமது பிரதான தளங்கள் எதுவும் இல்லாததால் அப்பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றி அதைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அதிக ஆள்விரயத்தை செய்ய வேண்டும் என்பதே புலிகளின் தந்திரம்.
யாழ்பபாணத்தில் 30 ஆயிரத்தின்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருந்தாலும் அதில் ஒரு சிறுதொகையினர் மட்டுமே வன்னியை நோக்கிய படை நகர்வில் முகமாலையூடாக நகர்த்தப்படுவார்கள். அதேபோல் மன்னார். பெரு நிலப்பரப்பிலும் பெருமளவு இராணுவத்தினரை விரயமாக்க இலங்கை அரசை நிர்பந்தித்து விட்டால் வன்னியை நோக்கிய படை நகர்வை இயன்றவரை தாமதமாக்கலாம். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இராணுவத்தினரை விட புலிகள் தரப்பில் அதிகமாக இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் மன்னார் பிரதேசத்துக்குள் இராணுவத்தை முடக்குவதற்கு புலிகள் அந்த விலையை கொடுத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது.
மறுபுறமாக இராணுவத்தினரும் புலிகளை தொடர்ந்து நெருக்கடியான நிலைமைக்குள் வைத்திருப்பதை தமது தந்திரமாக பாவித்து வருகின்றனர். அதற்காகவே முகமாலை, மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா போன்ற பல முனைகளிலும் நகர்வுகளை மேற்கொண்டு புலிகளை களத்தை நோக்கி இழுத்து விட்டுள்ளனர். இவ்வாறு புதிய களமுனைகளைத் திறக்கும் வாய்ப்பு இராணுவத்திற்கு மட்டுமே உண்டு. புலிகளைப் பொறுத்தவரை யுத்த களத்தில் தற்போது இராணுவத்தை முன்னேற விடாமல் தடுப்பது. அல்லது தமக்கு வாய்ப்பான பொழுதுகளில் எங்காவது இராணுவத்தினரின் நிலைகளைத் தாக்குவது என்ற மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடலாம். அண்மையில் முகமாலையில் அல்லது பேசாலையில் நடத்தப்பட்டவை இதுபோன்ற தாக்குதல்களே.
அநுராதபுர விமானத்தளம் மீதான தாக்குதல்கள் போன்று பிரச்சார வெற்றிக்கான சடுதித் தாக்குதல்களை செய்யக்கூடிய திறன் புலிகளுக்கு இருந்தாலும் அதனால் இராணுவத்தினரின் வன்னிப்படை நகர்வை அவர்களால் தடுக்க முடியாது. புலிகளின் கட்டுப்பாட்டு நிலப் பிரதேசத்தைக் குறுக்கும் அரசாங்கத்தின் இராணுவ மூலோபாயத்தை முறியடிப்பதற்கு புலிகள் படாதபாடு படுகின்றனர். அது கடினமாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அதில் பிரதான காரணம் அரசாங்கத்தின் அந்த மூலோபாயம் வெறும் இராணுவ மூலேபாயமாக மாத்திரமல்லாமல் அது அரசின் இருப்பை நிர்ணயிக்கும் அரசியல் மூலோபாயத்துடன் கலந்திருப்பதாகும். யாழ்ப்பாணம், திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாதவை. அங்கு புலிகளுக்கு பல வழிகளிலும் செலவுதானேயொழிய வரவு ஏதுமில்லை. மன்னார் மாவட்டம் அந்தரத்தில் நிற்கிறது. அங்கு படை நகர்வைத் தடுப்தற்காக புலிகள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளகின்றனர். மடுமாதாவையும் பயன்படுத்திப் பார்த்தனர். இறுதியல் மடுமாதா வன்னிமாதா ஆகியதுதான் கண்ட மிச்சம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகச் சிறிய பகுதியே புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. வன்னியைப் பொறுத்தமட்டில் அரசாங்கம் படைகளின் ஆழ ஊடுருவித் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதல் எனபவற்றுடன ஆட்சேர்ப்பு விடயத்திலும் புலிகள்; பெருமளவு நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ளனர். இந்தகைய நெருக்கடி நிலையில் இருந்து மீளுவதற்கு இருக்கும் ஒரே வழி அரசாங்கத்திற்கு தென்பகுதியல் நெருக்கடி கொடுப்பதேயாகும். அதைத்தான் தென்பகுதிக்குள் தமது நபர்களை ஊடுருவச்யெ;வது, சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவாகளைப் பாவிப்பது போன்றவை மூலம் சிவிலியன்களையும் அரச முக்கியத்தர்களையும் குறிவைத்து பரவலாக நடத்தும் குண்டுத்தாக்குதல்கள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்களும் காண்பிக்கின்றன.
அரசாங்கத்தின் மீது சிங்கள மக்களின் அழுத்தத்தை அதிகரிப்பதற்காகவும். சர்வதேச நெருக்கடிகளை கொடுப்பதற்காகவும் புலிகள் வடக்கு யுத்தகளத்துக்கு வெளியே பல்வேறு உத்திகளை கையாண்டுவருவதில் வெற்றிகண்டாலும் அதற்கு அரசாங்கம் அதேபாணியல் பதிலடி கொடுத்து வருகின்றது. அரசாங்கம் பதிலடியாக சந்தேகத்திற் கிடமானவர்கள் எந்த இனத்தவராயிருந்தாலும் கைது செய்கிறது. கடத்துகிறது. புலிகளுக்கு ஆதரவாக தென்பகுதியில் எழுதுபவர்கள் பேசுபவர்கள் எவராயிருந்தாலும் அவர்கள் மீது பல்வேறு விதங்களில் அரசு கடுமையான அழுதம் இடுகின்றது. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், உள்ளுர், வெளியூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் எவராயிருந்தாலும் அரசாங்கம் மிகக்கடுமையாக நடந்துகொள்கிறது. ஒட்டுமொத்த அரச இயந்திரமுமே இந்தப் பணியில் ஒருமுகப் படுத்தப்பட்டுள்ளன.
ஒன்றில் தாங்கள் புலிகளை அழித்து முடிப்பதற்கு நடத்தும் இந்த யுத்தத்திற்கு ஆதரவு தாருங்கள் அல்லது வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள் என்பதே அரசாங்கம் உள்ளுருக்கும் வெளிநாடுகளுக்கும் விடுக்கும் ஒரே செய்தியாகும். சொல்லப்போனால் ஒரு ஒட்டுமொத்த யுத்த சூழலை அரசாங்;கம் உருவாக்கியள்ளது. இதுவே புலிகளுக்கும் புலி ஆதரவுப் பிரச்சாரத்திற்கும் தற்போது பெரும் தலையிடியான விடயமாகும். வழமைபோலவே இவ்வாறான ஒரு கட்டத்தில் மேற்கு நாடுகள் மற்றும் ‘சர்வதேச சக்திகள்’ எனப்படுவோரிடம் இருந்து அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் வருகிறது. இம்முறை அரசாங்கம் அவற்றை துச்சமாக மதித்து முன்னோக்கி நகருகின்றது. தனக்கான இராணுவ மற்றும் சர்வதேச ஆதரவுத் தளங்களாக மேற்குலகை நம்பாமல் புதிய புதிய நண்பர்களோடு அது கைகோர்த்து வருகிறது. சர்வதேச ரீதியாக புலிகளுக்கெதிரான பிரச்சாரத்தில் வெளி நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சர்வதேச சக்திகள் மற்றும் ஸ்தாபனங்கள் விடும் கண்டனங்கள் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் வகையில் நபர்களை அரசாங்கம் நியமித்துள்ளது. இது முன்னெப்போதும் இலங்கையில் காணப்படாத நிலைமையாகும்.
இலங்கையில் தினம் நடக்கும் குண்டு வெடிப்புக்கள், வான்முட்ட உயர்ந்து நிற்கும் வாழ்க்கைச் செலவுகள் என்பவற்றடன் சாதாரண மக்கள் வாழ்க்கையை ஓட்டத் தலைப்பட்டுள்னர். புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்தத்தை ஆதரிக்கின்ற அளவுக்கு சிங்களத் தேசிய உணர்வு கிளர்ந்துள்ளது. இதனால் எதிர்கட்சிகளினால் அரசாங்கத்துக்கு எதிராக பெருமளவில் மக்களை அணிதிரட்ட முடியவில்லை. ஒரு காலத்தில் சமாதானப் பேச்சுக்கள் மூலம் இலங்கையில் சுமுக நிலைமையை கொண்டு வரலாம் என மக்கள் நம்பினர். ஆனால் தற்போது புலிகளை அழித்து முடித்தால் மட்டுமே அது சாத்தியம் எனவும்; அதற்காக அரசாங்கத்தின் யுத்தத்துக்கு தாம் ஆதரவு வழங்க வேண்டும் என்ற மனோநிலைக்கு மக்களை கொண்டு வருவதில் அரசு வெற்றிகண்டுள்ளது. அதற்கு எதிரானவர்கள் இலங்கை நாட்டின் துரோகிகள் என பகிரங்கமாக சாடப்படுகின்றனர். இந்த நிலைமை உருவாக புலிகளின் ஒட்டுமொத்த செயற்பாடுகள் பிரதான காரணமாகும்.
அரசாங்கம் தனது இராணுவ வெற்றிகளை தன் அரசியல் வெற்றிகளாகவும் காண்பித்து வருகிறது. கிழக்கு மாகாணத்தின் இராணுவ வெற்றியை அது அரசியல் வெற்றியாக மாற்றியுள்ளது. சிங்கள மக்களிடையே அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மன்னார் பகுதியல் நடத்தப்படும் தாக்குதல் மற்றும் முன்னேற்றங்களையும் அது தனது பிரச்சாரத்திற்கு நன்கு பயன்படுத்துகிறது. இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு, இராணுவத்தை விட்டு விலகி ஒடியவர்களை மீளச் சேர்த்துக்கொள்வது என்பதில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிகிறது. கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாண நிர்வாகம் தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளும் காய் நகர்த்தல்கள் புலிகளுக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தையும் இராணுவ அழுத்தத்தையும் கொடுக்கின்றன.
ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற இடங்களில் மோதல் நிலைமைகள் அதிகரிக்க அதிகரிக்க பயங்கரவாதத்துக்கெதிரான சர்வதேச சக்திகளின் கொள்கைகளும் கடுமையாகி வருகின்றன். அதனை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்தி வருவதோடு இலங்கையில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அதன் ஒருபகுதியாக மாற்றி சர்வதேச சக்திகளுக்கு அரசாங்கம் சவால் விடுகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மற்றும் கனடாவில் புலிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அந்த அடிப்படையில் அரசாங்கத்திற்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளன. அண்மையில் கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் மீதான தடையை‘An action to Curb Terror financing from Canadian soil’ என்றே கனேடிய அரசு வர்ணித்துள்ளது.
புலிகள் சென்றுகொண்டிருப்பது ஒரு வழிப் பாதை (One way).. அவர்களால் திரும்பி வர முடியாது. இந்த அழிவுகரமான அரசியலில் பயணித்தே ஆகவேண்டிய நிலைக்கு அவர்களே தம்மைக் கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் நேர்மையாக சமாதானப் பேச்சுக்களில் பங்கு பற்றவார்கள் என பரிந்துரைப்போர் இன்று எவருமில்லை. புலிகளின் அரசியலுக்கு எதிரி புலிகளேதான், வேறுயாருமல்ல. அரசாங்கத்துக்கெதிராக மனித உரிமை மீறல் தொடர்பான கண்டனங்கள் வந்தாலும் அரசாங்கத்தை எவரும் அதன் நிலையில் இருந்து அகற்ற முடியாது. அது தேர்தலில் மக்களால் மட்டுமே முடியும். ஆனால் பாரிய, ஒழுங்கான இராணுவ நடவடிக்கை மூலம் அரசாங்கம் புலிகளை அழித்து விடலாம். அதைச் செய்ய வேண்டாம் என உலகில் புலிகளுக்கு ஆதரவாக எவரும் குரல் கொடுக்கப் போவதில்லை. காரணம் புலிகள்
Post a Comment